Wednesday, December 17, 2025

கண்டன அறிக்கை!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலைப் பட்டதாரி ஆசிரியை திருமதி நேசச்செல்வி பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவியின் தாயார் மற்றும் உறவினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதையும் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டதையும் அரசியல் தொடர்புகளைக் கொண்டு தவறான காரணங்களைக்கூறி குற்றம் சாட்டுவதையும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் வாட்ச்மென் ,இரவுக் காவலர் பணியிடங்களை இனிமேலாகினும் நிரப்பிய வேண்டும்.

ஆசிரியர் பணிக்கு பாதுகாப்பு வழங்கும் பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை வேண்டுகிறேன்.

மு.கந்தசாமி

*மாநில பொதுச் செயலாளர், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

No comments:

Post a Comment