Monday, September 22, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 22.9.25 மாலை 6 மணி அளவில் மதுரை தேசிய ஆசிரியர் சங்க சார்பாக 1. 9.25 வெளியான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பின்படி 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வு எழுத வேண்டும் என்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என்பதை சுட்டிக்காட்டி இதில் மேதகு பாரத பிரதமர் தலையிட கோரி கோரிக்கை மனு மதுரை மாவட்ட ஆட்சியர் மூலமாக மேதகு பாரத பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோரிக்கை கடிதத்தில் அனைத்து ஆசிரியர்களும் பாதிப்படையாத வண்ணம் இதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மதுரை தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு .சா. பரமசிவம் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.கணேசன் பொருளாளர் திரு. ஆறுமுக கடவுள் மகளிர் அணி செயலாளர் திருமதி. ரத்தினமாலா மற்றும் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லபாண்டி அவர்கள் கலந்து கொண்டு கடிதத்தை மாண்புமிகு மதுரை மாவட்ட ஆட்சியர் வசம் வணங்கிய தருணம்.






No comments:

Post a Comment