மகாராணி அகல்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795), ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார்.
1.அகில்யாபாயின் கனவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார்.
2. இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.
3. அகில்யாபாய் கட்டிடக்கலைநுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் இந்தோர், மகேசுவர் பகுதிகளில் பல கோயில்களை நிறுவினார். இவருடைய ஆட்சிப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கோயில்கள், தர்மசாலை எனப்படும் ஓய்வு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கினார். கிழக்கே இந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களன குசராத்திலுள்ள துவாரகாதீசர் கோயில் முதல், கங்கை நதிக்கரையிலுள்ள காசி விசுவநாதர் கோயில் வரையிலும், கயை விஷ்ணுபாத கோயில், உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் , நாசிக் திரியம்பகேஸ்வரர் கோவில் , கயை விஷ்ணுபாத கோயில் மற்றும் பரளி வைத்தியநாதர் கோயில் ஆகிய மகாராட்டிரப் பகுதியிலும் தனது கோயில்களை கட்டினார். சோமநாதபுரத்தில் பாழடைந்த சிவன் கோயிலை மீண்டும் கட்டி குடமுழுக்கு செய்தார்.
4.இந்திய அரசு அகில்யாபாய் ஓல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அகில்யாபாய் ஓல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது.
5. 1996-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ம் நாள் இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது.
No comments:
Post a Comment