Saturday, November 2, 2024

INCOME TAX CALCULATOR EXCEL SHEET 2025

       CLICK HERE TO DOWNLOAD

IFHRMSல் பிடித்த வருமானவரி சரியா? 2024-25ற்கான துள்ளியமான வருமானவரி எவ்வளவு? IFHRMSல் கொடுத்த சேமிப்புகள் போதுமானதா? கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன? சமர்ப்பிக்க வேண்டியது எப்போது?


தமிழ்நாடு அரசின் ஊதியம் பெறும் ஊழியர்கள் அனைவரும் 2024-25 நிதியாண்டிற்கான வருமானவரிக் கணக்கீட்டு முறையை IFHRMSல் முன்னரே உள்ளீடு செய்துள்ளனர்.

இவர்களில், பழைய வரிக் கணக்கீட்டு (Old Regime) முறையைத் தேர்வு செய்துள்ளோர் தாங்கள் உள்ளீடு செய்துள்ள வரிக் கழிவுகள் / சேமிப்புகளுக்கான அசல் ஆவணங்களை டிசம்பர் முதல் வாரத்தில் (அதிகபட்சம் 10.12.2024 தேதிக்குள்) தங்களது அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு  ஒப்படைக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையில்தான் வரிக் கழிவுகளை அலுவலகத்தில் சரிபார்த்து இறுதி செய்வர்.

முன்னதாக, ஊழியர்கள் தாங்களாக உள்ளீடு செய்துள்ள சேமிப்புகள் அனைத்தும் தோராய மதிப்பாகத் தான் இருக்கும் என்பதால். . .

1. தங்களது ஆண்டு வருவாய்க்கேற்ற சரியான வரிக் கணக்கீட்டு முறை (Regime) எது?

2. Old Regimeஐத் தேர்வு செய்தோர் வரிக்கழிவு பெற சேமிப்புகளாக எவ்வளவு காட்டலாம்?

3. 50% & 53% DA மாற்றத்திற்குப் பின்னர் Old / New Regimeல் துள்ளியமாக எவ்வளவு வருமானவரி கட்ட வேண்டி வரும்?

4. IFHRMSல் தானியங்கி முறையில் வரி (ஓரளவு) சரியாகத்தான் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறதா?

என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள இணைப்பில் சென்று அறிவுச்சாளரம் IT Calculator 2025ஐ (Proposal Version 2) Excel fileஆக Download செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


நினைவிருக்கட்டும் OLD REGIME தேர்வு செய்தவர்கள்,

வீட்டுவாடகை இரசீது / ஒப்பந்தப் பத்திரம் அல்லது

 Rs.8333/-க்கு மேல் மாத வீட்டுவாடகை எனில், உரிமையாளரின் PAN நகல் அல்லது

Housing Loan எனில், வங்கியிலிருந்து பெறப்படும் Yearly Loan Repayment Statement.

 Insurance உள்ளிட்ட 80C தொடர்பான சேமிப்புகளின் இரசீதுகள் (Dec வரை கட்டியதற்குத்தான் இரசீதுகள் வைக்க இயலும்)

 NHIS நீங்கலாக, 80D மருத்துவக் காப்பீடு / செலவினங்கள் தொடர்பான இரசீதுகள்.

குடும்ப உறுப்பினர் மாற்றுத்திறனாளி (80DD) / இரத்தம், நரம்பு தொடர்பான சிகிச்சைச் செலவினம் (80DDB) எனில் அதற்குரிய சான்றுகள், Form 10I & மருத்துவச் செலவின இரசீதுகள்.

Education Loan எனில், வங்கியிலிருந்து பெறப்படும் Yearly Loan Repayment Statement.

வேறு ஏதேனும் சேமிப்புகளெனில், அதற்குரிய இரசீதுகள் உள்பட தாங்கள் எவற்றிற்கெல்லாம் உள்ளீடு செய்துள்ளீர்களோ / இவ்விரு மாதங்களில் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கெல்லாம் உரிய உண்மை ஆவணங்களை டிசம்பர் முதல் வாரத்தில் தங்களது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

Hearty Thanks to 
திரு .செல்வ.ரஞ்சித் குமார் .


No comments:

Post a Comment