தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) நடத்திய 11 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம், புதுடில்லி, யின் தலைவர் திரு. பங்கஜ் அரோரா அவர்களிடம், தமிழகத்தில் உள்ள, 23.08.2010 க்கு முன்பு நியமிக்கப்பட்ட, TET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி துன்பப்படுவதையும், இது சார்ந்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் விரிவாக பேசினோம்.
தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்தும் பேசப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எதுவும் செய்ய இயலாத நிலையினை சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் நிலைமையை போன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களின் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்வதாகவும் அதற்கு நீதிமன்ற வரம்பிற்குட்பட்டு, எந்த வகையில் ஆசிரியர்களுக்கு உதவ இயலுமோ அந்த வகையில் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். நமது கருத்துக்களை பொறுமையுடன் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்டு உறுதி கூறிய அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தந்த நமது தேசிய அமைப்பான ABRSM அமைப்பு செயலாளர் திரு மகேந்திர கபூர் அவர்களுக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வில் மாநிலத்தலைவர் திரு. திரிலோகசந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திரு. நீலமேகன், திரு.கிருஷ்ணகுமார், காஞ்சீபுரம் கோட்ட செயலாளர் திரு இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment