தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று (16/09/2024) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொடக்ககல்வி இயக்ககம் அலுவலகத்தில் சந்தித்து மாணவர்கள் நலன் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் உள்ளடக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு கோரிக்கையும் விரிவாக பேசப்பட்டது.குறிப்பாக ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் பாதிக்கப்பட்ட 20 ஆசிரியர்களின் கோரிக்கைகள் இயக்குனர் அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது
இயக்குனர் அவர்களும் கனிவோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து இயக்ககம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் செய்து ஆசிரியர்கள் நலனை காப்பாற்றுவதற்காக அனைத்து உதவிகளையும் விரைவாக செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்பதனை மகிழ்வோடு தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
No comments:
Post a Comment