Sunday, September 29, 2024

மாநில பொதுக்குழுக் கூட்டம் - 29/09/2024 - கள்ளக்குறிச்சி!!!

 அனைவருக்கும் வணக்கம் . நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொதுக்கூட்டம் (29/09/2024 ) இன்று சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாநில, கோட்ட மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக திரு ஏ கே டி கோபி ( Retired CEO PA) அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற TNPSC தேர்விற்கான பயிற்சி மூலம் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆண்டு அறிக்கை, மாநில அளவிலான சந்தா சேகரிப்பு, சங்க சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  சங்க வளர்ச்சி குறித்தும் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.. பொதுக்குழு தீர்மானங்கள் அனைவரின் ஒப்புதலோடும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

பொதுக் குழுக் கூட்ட தீர்மானங்கள் 
















No comments:

Post a Comment