தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு
திருவள்ளூர் மாவட்டம்
முப்பெரும் விழா
குரு வணக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பசுமைத் தமிழகம் தொடக்க விழா
இன்று( 03:08:2024 ) காலை, DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் திரு. ம.கோ.திரிலோகசந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் திரு வெ. கதிரொளி வரவேற்புரை நிகழ்த்தினார்.
குருவின் பெருமையைப் பற்றி அரசு மேல்நிலைப்பள்ளி (ஆண்கள்)
இரா.கி.பேட்டை , தலைமை ஆசிரியர் திரு.கோ.சுந்தர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கி.வெ. ராமமோகன் அவர்களும், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சே.ஆ. தாமோதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
பணி ஓய்வு பெற்ற சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நா. பூபாலமுருகன் அவர்களும், திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. இரா. கலைச்செல்வன் அவர்களும், செஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. வி.குணசேகரன் அவர்களும், பேரம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. சி. பழனி அவர்களும், திருவள்ளூர் ஆர். எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. இரா.இரவிச்சந்திரன் அவர்களும் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் திரு. தி.நீலநேகன் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்ய,
மாநில தலைமையிடத்து செயலாளர் திரு.ச.வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
கோட்டச் செயலாளர் திரு.ம. சதீஷ் குமார் அவர்கள் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் திரு.மே.சு.பார்த்தீபன் மற்றும் பொறுப்பாளர்கள் திரு.கிருஷ்ணகுமார், திரு.பரமசிவம், திரு.நவீன்குமார் ஆகியோர் செய்தனர்.
No comments:
Post a Comment