வியாசர் பகவான் அவதார தினத்தை முன்னிட்டு ஆடி மாதம் தமிழகம் எங்கும், தேசிய ஆசிரியர் சங்கம் குருவந்தனா விழாவாகக் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு தேசிய ஆசிரியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் கிளை சார்பாக 26 -07- 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில் குருபூஜை விழா இராஜபாளையத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திரு.சே.சரவணச்செல்வன் வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவர் திரு.பா.விஜய் அவர்கள் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நல்லாசிரியருமான முனைவர் T.Nராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும், ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டார்கள். மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் (notebooks) வழங்கப்பட்டன. குமரன்
ஸ்வீட்ஸ்டால் உரிமையாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் இந்த ஆண்டு திட்டத்தின் படி புங்கை , வேம்பு, பாதாம் , மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும், மாணவ மாணவிகளும் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர். பள்ளிக்கு 10 மரங்கள் வீதம் பள்ளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு முழுவதும் மரக்கன்றுகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் தேவை உள்ளவர்கள் பெற்றுச் செல்லலாம் என்று மாநிலத் துணைத்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மாவட்டச் செயலாளர் திரு.செ.இஞ்ஞாசி ராஜா அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா நிறைவு பெற்றவுடன் வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment