Sunday, June 30, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்டச் செய்திகள்

 இன்று(30/06/2024) தேசிய‌ஆசிரியர் சங்க(தமிழ்நாடு) மன்டலக் கூட்டம் திருச்சி திருவானைக்கோவில் இனிதே நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாவதாக மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை நல்கினார். மாநில இனணச் செயலாளர் திரு ராஜகேபாலன் சந்தா சேகரிப்பு பற்றி விவரித்து கூறினார். மாநில ஊடகச் இணை செயலாளர் திரு ஸ்ரீராம் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற சங்க நிகழ்வுகள் குறித்து பேசினார். மாநில இனணச் செயலாளர் திரு ராகவன் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி வழிகாட்டினார். திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி மல்லிகா உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் திரு ப. விஜய் அவர்கள் குரு வந்தனம் நிகழ்வைப் பற்றியும். அலுவலக நடைமுறை பற்றியும் பசுமை தமிழகம் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். நிறைவாக  மாவட்ட பொருளாளர் திரு சோமசுந்திரம் அவர்கள் நன்றி உறை வழங்கினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜேந்திரன் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் திரு முரளி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.








No comments:

Post a Comment