1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மே 11 அன்று இந்தியா தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடுகிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனைகள் என்பது இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து வெடிப்புகளின் தொடர் ஆகும்.
1998 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், 1998 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்து அணுகுண்டு சோதனைகளை (பொக்ரான்- II) நடத்தினார்.
போக்ரான் - II இந்தியாவின் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது.
வெற்றிகரமான பொக்ரான் - II சோதனைக்குப் பிறகு, இந்தியா ஆறாவது அணுசக்தி நாடானது.
இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு, மே 11ஆம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தது.
முதல் தேசிய தொழில்நுட்ப தினம் மே 11, 1999 அன்று அனுசரிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சாதனைகளை நினைவுகூரும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான திறவுகோலாகவும் , கடினமான வேலைகளை எளிமையாக செய்யவும் நவீன தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment