கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை.
மார்ச் 27 முதல்விண்ணப்பிக்கலாம் .
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
ஒன்றாம் வகுப்புக்கான
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு,
மார்ச் 27-ம் தேதி
காலை 10 மணிக்கு தொடங்கி,
ஏப்.17-ம் தேதி
இரவு 7 மணிக்கு நிறைவடையும்.
மாணவர் சேர்க்கைக்கான
முழு விவரங்களையும்
www.kvsonlineadmission.kvs.gov.in
என்ற இணையதளத்தில்
அறிந்துகொள்ளலாம்.
சேர்க்கை கோரும் குழந்தையின்
குறைந்தபட்ச வயது
2023 மார்ச்
*31-ம்தேதியில் 6வயதாக*
ஆக இருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை
வழிகாட்டு நெறிமுறைகள்
என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால்
2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான
மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு
சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
ஏப்.3-ம் தேதி
காலை 8 மணிக்கு தொடங்கி
12-ம் தேதி
மாலை 4 மணிக்கு முடிவடையும்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள்
(2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்)
இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment