தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் காணொளி மூலம் நேற்று (24.02.2024) மாலை 6.00.மணிக்கு மாநில நிதிக்காப்பாளரும்,பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவருமான திரு.எஸ்.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்கு பின்பு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1).10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் கடந்த 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டத்தை சிறப்பாக நடத்தினோம்.
அதன்பின்பு அரசு அழைப்பின் பேரில் 19.02.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நமது கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து,10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் எனக்கேட்டுக் கொண்டார்கள்.
அப்பொழுது அங்கிருந்த தொலைக்காட்சியில் அரசு அலுவலர்,ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை நாளைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு வெளியானது. அதனை கண்ட நமது கூட்டமைப்பு தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீது வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையோடும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை, அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததை அறிந்த நமது கூட்டமைப்பை சார்ந்த பல லட்சக்கணக்கான அலுவலர்கள் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள். அதன் எதிரொலியாக அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் குடும்பத்தினர்கள் சிந்தித்து வாக்களிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
2).சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் 26 .02.2024 முதல் நடத்தவுள்ள காத்திருப்பு போராட்டம்,சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் SSTA அமைப்பிற்கும் நமது கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3) நமது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வருகின்ற
(16.03.2024) அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்ஙனம்,
எஸ்.பாஸ்கரன்,
கூட்டத்தலைவர் (ம) மாநில நிதி காப்பாளர்.
மேலே கண்ட கூட்டமைப்பின் செய்தியை நமது மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதம் வருகை தருவதற்குரிய வழி வகைகளை செய்திட வேண்டுகிறேன்.
அன்புடன்
மு.கந்தசாமி
பொதுச் செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
No comments:
Post a Comment