இன்று 23.1.24 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளில் மதுரை ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை சார்பாக கடமை உணர்வு தினம் கொண்டாப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. P. இந்துமதி மற்றும் சிறப்பு அழைப்பாளர் திரு.R.ஜெயபாலன் பேராசிரியர் & துணை முதல்வர்(ஓய்வு) விவேகானந்தர் கல்லூரி திருவேடகம். ஆகியோர் விளக்கேற்ற சரஸ்வதி வந்தனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சிறப்பு அழைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவருக்கும் அமைப்பு சார்பாக பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசு வழங்கியும் கெளரவிக்க பட்டனர்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் இருவரும் ஆசிரியர் மத்தியில் கடமை யுணர்வு தினம் சிறப்புரையாக ஆசிரியர்களின் கடமை பற்றி மிக சிறப்பாக எடுத்து உரைத்தனர். நிறைவுரையாக மாவட்ட தலைவர் சா.பரமசிவம் நமது அமைப்பு பற்றியும் கடமையுணர் தினம் பற்றியும் நிறைவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் திரு.கணேசன் நன்றியுரை கூறினார். மாவட்ட பொருளாளர் திரு ஆறுமுக கடவுள் மற்றும் பள்ளி உறுப்பினர்கள் விழாவினை ஏற்பாடு செய்து இருந்தனர். 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவிகள் விழாவில் கலந்துக் கொண்டனர். விழா முடிவில் பள்ளிக்கும் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கும் சிறப்பு அழைப்பாளர் திரு.R. ஜெயபாலன் பரிசினை வழங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள்🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 திருமதி. சுமதி மற்றும் சிவா விழா ஏற்பாட்டினை முன்னிற்று நடத்திக் கொடுத்தனர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுப் பெற்றது.
No comments:
Post a Comment