*தேசிய ஆசிரியர் சங்கம்* - *செங்கல்பட்டு மாவட்டம்:*
*********************************
*மிக்ஜாம் புயல் நிவாரண முகாம்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமது செங்கல்பட்டு மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மிக்ஜாம் புயல் நிவாரண முகாம் சென்னை-பெரும்பாக்கத்தில் நடத்தப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவியரின் குடும்பத்திற்கு *அரிசி, பாய் ,துண்டு, போர்வை, பிஸ்கட்* ஆகிய அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக அளிக்கப்பட்டன.
முகாமில் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முக்கியம் துறைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இப்பள்ளிகளின் மாணவ மாணவியர் வருகை தந்து முகாமில் பயன் பெற்றனர். மொத்தம் 50 குடும்பங்கள் நிவாரண உதவி பெற்றனர்.
முகாம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாவட்டதலைவர் *திரு.சி. பா. நாராயணன்* தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்
*திருமதி ஜெயந்தி* மாவட்ட துணைத்தலைவர்
*திரு ராஜேந்திரன்* மாவட்ட அமைப்புச் செயலாளர் *செல்வி.ரோஜா* ஆகியோர் இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து மாணவ மாணவிகளுக்கு உதவினார்கள்.
இம்முகாம் சிறப்பாக நடைபெற நிதிஉதவியும் பொருள் உதவியும் அளித்த அனைத்து புண்ணியஸ்தர்களுக்கும் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நன்றி! நன்றி!
இப்படிக்கு
*சி.பா.நாராயணன்*
மாவட்ட தலைவர்.
No comments:
Post a Comment