தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மற்றும் GTN யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை இணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான இலவச இயற்கை மருத்துவ சிகிச்சை முகாம் GTN கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .நிகழ்ச்சியானது சரஸ்வதி வந்தனத்துடன் துவங்கியது. தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் திரு. ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார் .நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். தர்மராஜ் அவர்கள் வருகை புரிந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். தீபா மற்றும் டாக்டர். ராஜா ஆகியோர் இயற்கை மற்றும் யோக முறை சிகிச்சை பற்றி விளக்கி கூறினர்.மேலும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். நிறைவாக நன்றியுரை மாநில துணைத்தலைவர் திரு.பா .விஜய் நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment