Sunday, August 6, 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 கடந்த 2021 ஆம் ஆண்டு *தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடின்   கள்ளக்குறிச்சி கிளை இலவச TNPSC பயிற்சி வகுப்பை ஆரம்பித்தது .இதில் பயின்ற 25 மாணவ மாணவிகளில் ஐந்து நபர்கள் TNPSC GROUP -4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை ஏற்க உள்ளனர்.* அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் குரு வணக்கம் விழா மற்றும் பாராட்டு விழாவை கச்சிராயபாளையம் வான்மதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்தியது .இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் திரு.தருமலிங்கம் வரவேற்பு உரையாற்றினார், மாவட்ட தலைவர் திரு.பொ. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் .மாநில இணை செயலாளர் திரு.ச. கதிர்வேல் அவர்கள் முன்னிலை வகித்தார் .இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) திரு. A.K. கோபி M.Sc.,M.Ed.,M.Phill., அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார் .வான்மதி குழும பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் திரு. M.சின்னதுரை M.A.,B.Ed., அவர்கள் இலவச பயிற்சி அளித்த ஆசிரியர்களை கௌரவித்து பேசினார் .தேசிய ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களுக்கு கல்விச் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தது. அரசு பணி ஏற்க உள்ளோருக்கு பணிப்பதிவேட்டினை வழங்கி வாழ்த்தியது.  கல்விச் செம்மல் விருதுப் பெற்ற ஆசிரியர்கள்

1.சி.தர்மலிங்கம்  இடைநிலை ஆசிரியர். 

2.மு.மாரியாப்பிள்ளை

பட்டதாரி ஆசிரியர்.

3.ச.மாயவேல் 

ஆசிரிய பயிற்றுநர்.

4.பி.மாயவேல்

இடைநிலை ஆசிரியர்.


TNPSC தேர்வில் வெற்றி பெற்று இளநிலை உதவியாளராக அரசு பணியை ஏற்பவர்கள்


B.ரம்யா மற்றும் K.மகாலட்சுமி (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்) M.இளமதி (மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதாரம் )V.சங்கீதா (பள்ளிக் கல்வித்துறை) மற்றும் P.சந்தியா (முதன்மை நீதிமன்றம்) .


நன்றியுரை உடன் விழா இனிதே நிறைவுற்றது .



No comments:

Post a Comment