Tuesday, August 8, 2023

வெள்ளையனே வெளியேறு இயக்க நாள் - ஆகஸ்ட் 8

 ஜூலை 1942-இல் வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதையடுத்து ஆகஸ்ட் 8 ஆம் நாள் மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கடுத்த நாள் ஆகஸ்ட் 9 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை பிரித்தானிய அரசு சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால் ஓராண்டுக்குள் காலனிய அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கிவிட்டது.



No comments:

Post a Comment