தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
குரு வணக்கம் நிகழ்வு
🪔 இன்று ஆடி -14, (28-7-23) வெள்ளிக்கிழமை நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு, ஈரோடு மாவட்ட கிளை சார்பாக குரு வணக்கம் நிகழ்ச்சி ஊ.ஒ.ந.பள்ளி, பெருந்துறை மேற்கு பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஈரோடுமாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குரு வணக்கம் நிகழ்ச்சி மூலம் சமுதாயத்திற்கு பயனுள்ள சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்து விளக்கப்பட்டது.பெருந்துறை காந்திநகர் பகுதி அங்கன்வாடி மையத்திற்கு ₹.5,500/- மதிப்புள்ள அலமாரி (Bureau) மற்றும் தந்தையைப் பிரிந்து வறுமையில் மாணவர் ஒருவரின் குடும்பத்திற்கு இரண்டு மாதத்திற்கு தேவைப்படும் ₹.4,000/-மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் நமது சிறப்பு விருந்தினர்கள் திரு.சோ.ரவிச்சந்திரன் மற்றும் திருமதி.த.தனபாக்கியம் அவர்களது வாழ்த்துரைக்கு பின் அவர்களது கரங்களாலேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் திரு.சண்முகராஜூலு அனைவரையும் வரவேற்றார்.தற்போதைய திமுக அரசால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல்,போதை பொருள்களால் மாணவர்கள் தடம் மாறாமல் இருக்க உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல்,ஆசிரியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருதல் உட்பட பல முக்கிய கோரிக்கைகள் தமிழக அரசுக்கு மாநில பொதுச் செயலாளர் திரு.கந்தசாமி அவர்கள் மூலம் வைக்கப்பட்டுள்ளன. திரு. ஶ்ரீஹரி ஐயா அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு.சந்திரசேகரன் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment