Tuesday, June 6, 2023

மதுரை மாவட்டச் செய்திகள்

 சேவாபாரதி, பி. எல்.ராய் ஐ.ஏ.எஸ் இணைந்து நடத்தும் ஒருவருடத்திற்கான  இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய IAS உட்பட UPSC மற்றும் TNPSCE Group I தேர்விற்கான இலவச பயிற்சி முகாமிற்கான நுழைவுத் தேர்வு மதுரை உட்பட 10 நகரங்களில் இன்று (4/6/23) தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது. இத்தேர்வு பணியில் தேசிய ஆசிரியர் சங்கமும் மேற்குறிய அமைப்புகளுடன் இவ்வாண்டு இணைந்து இச்சேவைப் பணியில் ஈடுபட்டது. மதுரை மையத்தில் சுமார் 181 தேர்வாளர்கள் ( மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்) விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மைய ஆயத்தப்பணி கடந்த வெள்ளி முதல் மேற்கொள்ளப்பட்டது. மதுரை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் திரு.ஆறுமுக கடவுள் மற்றும் மூன்று உறுப்பினர்களும் சேவாபாரதி அமைப்பின் மூலம் 7 பணியாளர்க்கும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேற்கண்ட பணியினை மேற்கொண்டோம். வரும் காலங்களில் நமது அமைப்பு உறுபினர்கள் தேர்வு பணிக்கோ அல்லது தேர்வாளர்களின் பயிற்சிக்கோ முன்வந்து சேவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட அனைத்து பணிகளையும் சேவா பாரதி அமைப்பின் மாநிலப் பொருப்பாளர் திரு.சுரேஷ்ஜியும் மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு.பரமசிவமும் முன்னின்று நடத்திக்கொடுத்தனர்.








No comments:

Post a Comment