Saturday, June 24, 2023

24-06-2023

 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.



💐💐💐💐💐💐💐   

                                              *இன்று (24/6/2023) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு. திரிலோகசந்திரன் இணைச் செயலாளர் திரு.ராகவன், கோட்ட பொறுப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து தொடக்க கல்வித்துறை மற்றும் BRTE, பகுதி நேர ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். ஒவ்வொரு கோரிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நன்கு படித்து, எல்லைப்புற மாணவர்களின் நலன் கருதி மொழிப்பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்ற தகவல் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவித்தார்.*


*LKG, UKG வகுப்புகளுக்கு தனி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் சார்ந்தும், TET தேர்வு குறித்து NCTE க்கு நமது மாநில கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்ப வேண்டிய கோரிக்கையினை பரிசீலிப்பதாகவும்தெரிவித்தார்.*


 *எல்லைப்புற மாவட்டங்களின் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்தல் பற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் கேட்டபோது, அதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.*

 

*ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பள்ளிகளில் இருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணக்கிட்டு அளிக்க வேண்டும் எனவும், ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி செயலர் அவர்களிடம் கூறினார்.*


*பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மற்றும் IED ஆசிரியர்களின் பணி வரன்முறைப்படுத்தலின் அவசியம் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.*


👍👍👍👍👍👍👍


*M.K.திரிலோகசந்திரன்* 

*மாநிலதலைவர்* 

 *தேசிய ஆசிரியர்சங்கம்*

 *தமிழ்நாடு*






No comments:

Post a Comment