Saturday, April 8, 2023

தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் - முழு விவரம்

 07-04-2023 அன்று திருவண்ணாமலையில் மாநில செயற்குழு கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. 

 மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் சிறப்புடன் பங்கேற்றுள்ளனர். 
தேசிய ஆசிரியர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து மாநிலத்தலைவர் திரு. ம.கோ திரிலோகச்சந்திரன் அவர்கள் விளக்கினார். 
நம் சங்கத்தின் இலக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அய்யா மற்றும் மாநில பொருளாளர் திரு. இர.திருஞான குகன் ஆகியோர் விளக்கினார்.
மாநில மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி.ஸ்ரீ .சாருமதி தேவி அம்மையார் சங்கத்திற்கு மாத்ரு சக்தியின் அவசியம் குறித்தும் பெரும்பாலான ஆசிரியைகள் சங்கத்தில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
நம் தேசிய ஆசிரியர் சங்கத்திற்கென பிரத்தியேகமாக உள்ள whatsapp facebook, youtube, Blogspot & website ஊடகத்தை அனைத்து ஆசிரிய பெருமக்களும் பின் தொடருமாறு ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு. S. யுகபதி 

நிகழ்ச்சியை மாநிலத் துணைத்தலைவர் திரு. து முருகன் ஐயா அவர்கள் தொகுத்து வழங்கினார். செயலர் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சௌந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று அண்ணாமலையார் - உன்னாமுலை அம்மனின் தரிசனம் பெற்று மன நிறைவுடனும் சங்கத்தின் இலக்கை எட்ட வேண்டும் என்ற சங்கல்பத்துடன் அவரவர் இல்லங்களுக்கு பாதுகாப்புடன் சென்றடைந்தனர்.

மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

  • தேசிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றியமைக்கும், மற்றும் தனிதனித் துறைகளை ஓரே துறையாக ஒருங்கிணைத்தமைக்கம் தமிழக முதல்வருக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • கடந்த 27.12.22 அன்று பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தோம். அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி, எங்களை  போராட்ட களத்திற்கு இட்டுச் செல்லாமல் உடனடியாக பழைய பென்சன் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுகிறோம். 

  • மருத்துவர்களுக்கு இருப்பது போல பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றி, அதை உடனே அமல்படுத்தி, கட்டப்பட்டுள்ள ஆசிரியர் கரங்களை கட்டவிழ்த்து விட்டு, கல்வித் தரம் உயர, மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளை கட்டுக்குள் கொண்டுவரவும், போதை பொருள் நடமாட்டத்தை தமிழகத்தில் முற்றிலுமாக ஒழித்திடவும் வேண்டுகிறோம்.

  • மத்திய அரசைப் போலவே தடங்கலின்றி, தாமதமின்றி, அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். 

  • பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவு ஆய்வு (RESULT ANALYSIS) என்ற பெயரில் நெருக்குதல் ஏற்படுத்தாமல் கல்வித் தரத்தையும் மாணவர் எண்ணிக்கையும் உயர்த்த ஒரு சேர கவனம் கொடுக்க வழிகாட்ட வேண்டுகிறோம். அதுவே மாணவர் இடைநிற்றலை தடுக்கும் என எமது சங்கம் கருதுகிறது. 

  • வரும் மே மாதத்திலேயே, புதிய பணியிடம்,  விருப்ப மறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து வித கலந்தாய்வுகளையும் நிறைவு செய்து வரும் கல்வி ஆண்டு பள்ளி திறக்கும் போதே காலிப்பணியிடம் ஏதுமின்றி இருக்க ஆவன செய்ய வேண்டும். 

  • கடந்த 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 12000 பகுதி நேர ஆசிரியர்களை தங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி கால முறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டுகிறோம்.

  • மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் வினாத்தாள் மற்றும், விடைத்தாள் விலையில்லாமல் இலவசமாக வழங்க வேண்டுகிறோம்.

  • வரும் கல்வி ஆண்டு முதல் உயர் தொழில் நுட்ப ஆய்வு கூடம் முழு வீச்சில் பெரும்பாலான பள்ளிகளில் இயங்க உள்ளதால். அதற்கு தனியாக தகுதி பெற்ற கணிணி ஆய்வக உதவியாளரை அனைத்துப் பள்ளிக்கும் நியமிக்க வேண்டும். மேலும் காலியாக உள்ள இரவுக் காவலர், இளநிலை எழுத்தர் போன்ற பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 

  • போட்டிகள், ஆண்டு விழாக்கள் அனைத்தையும் அரையாண்டுக்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டும். அது மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த உதவியாக இருக்கும். 

  • ஜுனில் வெளியாகும் மாநிலக் கல்வி கொள்கைக்காக ஆவலாக காத்திருக்கிறோம். மாநில, தேசியக் கல்விக் கொள்கைகளில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆய்வு செய்து மற்ற மாநிலங்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஈடாக நம் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த உடனே அமல் படுத்த வேண்டுகிறோம்..

  • உருது பள்ளிகள், மாநில எல்லையில் உள்ள பள்ளிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  • அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்வில் விலக்கு அளித்தது போலவே, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தகுதி தேர்விலிருந்து (TET) விலக்களித்து பாதிக்கப்பட்ட 1500 ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  • இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவிற்கு கால நிர்ணயம் செய்து உடனடியாக முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். 

  • OutSourcing முறையில் கல்வித் துறையில் பணியாளர் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். 


















No comments:

Post a Comment