Monday, May 9, 2022

பட்டுக்கோட்டை வட்டார செய்திகள்

 08.05.22 ஞாயிறு

 டெல்டா மண்டலத்தின் செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டை லிட்டில் பிளவர் பள்ளியில்  டெல்டா  கோட்ட செயலாளர்  வா ஸ்ரீராம்  தலைமையில் காலை 10 மணிக்கு துவங்கியது.

 விழாவில்  மாநிலச் செயலாளர் சி ராகவன்   அவர்களும்,  மாநில இணைச் செயலாளர் ஆர் ராஜகோபாலன் அவர்களும்  கலந்துகொண்டு சங்கத்தின்  சித்தாந்தங்களையும்எதிர்கால  பயணத் திட்டத்தையும் விளக்கினர்.

 பணி மாறுதல் பதவி உயர்வு பணி ஓய்வு  முதலிய  காரணங்களால்  பொறுப்பு மாற்றம்  மற்றும் புதிய பொறுப்புகள் ஆகியவற்றுக்கு  செயற்குழுவில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி  வருகிற ஜூன் மாதம் முதல் 

 தஞ்சாவூர் மாவட்ட  தற்போதைய தலைவர்

திரு  இரா பார்த்திபன்

 அவர்கள் மாவட்ட அமைப்பு செயலாளராக  செயல்படுவார்.

1, ஜுன்  முதல் தஞ்சாவூர் உமா மஹேஸ்வரா   மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு

 J கிருஷ்ண மோகன் அவர்கள்  மாவட்ட தலைவராகவும்

பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு 

N ஐயப்பன்  அவர்கள் துணைத்தலைவராகவும் செயல்படுவார்கள்

மேலும் இன்று முதல்

 ஒரத்தநாடு கல்வி மாவட்ட பொறுப்பாளராக வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்  திரு  எஸ் சுருளிராஜ் அவர்களும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட பொறுப்பாளராக கரிசவயல் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு என் ராஜாராம் அவர்களும் செயல்படுவார்கள்.

 திருவாரூர்  மாவட்ட செயலாளராக  அடியக்கமங்கலம்  அரசு மேல்நிலைப்பள்ளி  முதுகலை பொருளியல் ஆசிரியர் திரு  K ரவி அவர்களும்

திருவாரூர் மாவட்ட  துணைத்தலைவராக திரு ஆர் சரவணன் அவர்களும் தொடர்ந்து

செயல்படுவார்கள்.

நம் சங்க உறுப்பினர்கள்

தொடர்ந்து சிறப்பாக

ஒத்துழைக்கும்படி

அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.





நிகழ்ச்சி ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்த

தஞ்சை குழுவை

மீண்டும் பாராட்டி

மகிழ்கிறேன்.


-- ரா ராஜகோபாலன்

மாநில இணைச்செயலாளர்

No comments:

Post a Comment