இன்று (22-01-2022)தேனி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கடமை உணர்வு தினம் நிகழ்வு நடைபெற்றது.மாவட்டத் தலைவர் திரு சரவண கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார் .தேசிய ஆசிரியர் சங்கத்தைப் பற்றியும்அதன் பணிகளைப் பற்றியும் மாநில துணைத்தலைவர் திரு பா. விஜய் அவர்கள் பேசினார். மேலும் கடமை உணர்வைப் பற்றி தலைமையாசிரியர் திரு. நல்லசிவம் அவர்கள் பேசினார்.மாவட்ட செயலாளர் திரு. சிவகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சார்ந்த பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment