பட்டம் போய்விடும்
பார்த்துக்கொள்!
எமதர்மனே ஏன் அழைத்தாய்?
உன் அரசாங்கம் காக்க வரும்படி
தலைமை தளபதியை அழைத்தாயோ?
உலகிலேயே
உத்தம வீரன் என்பதால்
உடனேயே அழைத்தாயோ?
உன்னிடம் வந்தும்
பதர்களாய் திரியும்
பாவிகளை அழிக்க
பாதியில் அழைத்தாயோ?
எங்கள் தளபதி புகழ்பாட வார்த்தைகளை
தேடுகிறேன்.
தமிழன்னையோ
துக்கத்தில் வாயடைத்து நிற்கிறாள்.......
என் பாரத தாயோ
நெஞ்சடைத்து
நிற்கிறாள்.........
விரைவில் எங்களின் தளபதியை திருப்பி
கொடுத்துவிடு......
இல்லையேல்
உன் தர்மன் பட்டம்
எங்கள் தலைமை
தளபதிக்கு வந்துவிடும்.........
பட்டம் இழப்பாய்....
ஜாக்கிரதை.
--------- விராலிமலை
ஆர் ராஜகோபாலன்
பி.கு: நாளை நம்
வகுப்பறை பாடம்
தலைமை தளபதி
பிபின் ராவத்தாக
இருக்கட்டும்
No comments:
Post a Comment