Wednesday, December 22, 2021

விழுப்புரம் மாவட்ட செய்திகள்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - விழுப்புரம் மாவட்டம் சார்பில், நான்கு அரசு பள்ளிகளில் திருக்குறள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருமதி.E. பூங்குழலி விழுப்புரம் கோட்ட மகளிர் அணி செயலாளர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் திரு A. வேல்முருகன் சமூக சேவகர் வட-தமிழ்நாடு & சமுதாய ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார். திருக்குறள் மாண்புகளை எடுத்துரைத்து அதன்வழி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் கூறினார்.
தலைமையாசிரியர் திரு. நாகமணி, சேதுராமன், திருமதி. நிர்மலா, திருமதி உமா மகேஸ்வரி கியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. உமாதேவி அவர்கள் திண்டிவனம் கல்வி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி. எம். எழிலரசி திண்டிவனம் கல்வி மாவட்ட தலைவர் திரு.அருள், திருமதி. லக்ஷ்மி ரேகா, திரு. நாகராஜன் கோட்ட பொறுப்பாளர் கோவிந்தன் மற்றும் தேசிய சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





விழா அழைப்பிதழ்

No comments:

Post a Comment