Thursday, October 21, 2021

ABRSM - தேசிய நிர்வாகிகள் கூட்டம் - புதுடெல்லி

 தேசிய ஆசிரியர் சங்கத்தின் தாய் சங்கமான ABRSM கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (17/10/2021,18/10/2021)ஆகிய இரு நாட்கள் தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுடெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா கல்லூரியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக மாநில துணைத்தலைவர் திரு. விஜய் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.ஸ்ரீ சாருமதி தேவி ஆகியோர் கலந்துகொண்டு தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்துதல்,நவோதயா பள்ளி தமிழகத்தில் அமைத்தல் ஆகியவற்றை கோரிக்கையாக வைத்தனர். அதுபோலவே தமிழக ஆசிரியர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களுக்கான கல்வித் துறை அமைச்சர் டாக்டர். சுபாஷ் சர்க்கார் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இவ்விரு நாள் நிகழ்வில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றியும், 75வது சுதந்திர வருடத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பதைப் பற்றியும் ஆசிரியர்-மாணவர் நலன் சார்ந்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.




















No comments:

Post a Comment