Saturday, June 22, 2024

ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!!!

 ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!

ஜூலை -15 கல்வி வளர்ச்சி நாள் Proceedings - Download here

DEE - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு !!!

 Download 

Revised Teacher Transfer Counseling Dates !!!

 Download 

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 12 !!!

 அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை , திருவாரூர் மாவட்டம் 

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.
இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் நகரிலிருந்து  சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிசேகவல்லித் தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன் பட்சிராசன் சன்னதி உள்ளது. சாலையின் எதிர்ப்புறம் கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி உள்ளது.

மூலவர்
பக்தவத்சலப் பெருமாள். இவர் பக்தராவிப் பெருமாள் என்றும் அறியப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

தாயார்
அபிஷேகவல்லித் தாயார்.

விமானம்
உட்பல விமானம்.

தல விருட்சம்
மகிழம்

தீர்த்தங்கள்
தர்சண புஷ்கரணி தீர்த்தம்

திருவிழா
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும்.

திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர்.

இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம்.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.





Thursday, June 20, 2024

சர்வதேச யோகா தினம் - 21/06/2024

 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி, யோகா பயிற்சியின் பல நன்மைகளை ஊக்குவிக்க உலக மக்களால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நமது நல்வாழ்வுக்காக யோகா வழங்கும் முழுமையான நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். இது நமது வேகமான வாழ்க்கையில் சமநிலையைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் நமது உடல், மன மற்றும் ஆன்மீக அம்சங்களில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலை வளர்க்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் மேம்படுத்த யோகா உதவுகிறது.

சர்வதேச யோகா தினத்தின் 2024 இன் அதிகாரப்பூர்வ தீம் "பெண்கள் அதிகாரமளிப்பதற்கான யோகா" ஆகும் .

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், அவர்களின் உடல், மன, உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் யோகா ஒரு விரிவான கருவியாக செயல்படுகிறது. அதிகாரம் பெற்ற பெண்கள், தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாற்றத்திற்கான வக்கீல்கள், உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் சமூகம் முழுவதும் அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பாத்திரங்களை வகிக்கிறார்கள்

யோகா, இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய நடைமுறை, உடல், மன மற்றும் ஆன்மீக கூறுகளை உள்ளடக்கியது. "யோகா" என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது மற்றும் உடல் மற்றும் நனவின் ஒன்றிணைப்பைக் குறிக்கிறது, அவற்றின் இணக்கமான தொடர்பைக் குறிக்கிறது.

இன்றைய உலகில், யோகா பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளது மற்றும் பரவலான புகழ் பெற்றுள்ளது.

 2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது யோகாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச தினத்தின் யோசனையை முன்மொழிந்தார். யோகாவை "இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு" என்று விவரித்த அவர் , "ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்க பங்களிக்க முடியும்" என்றும் கூறினார் . யோகா என்பது உடல் பயிற்சி மட்டுமல்ல, தன்னோடும், உலகத்தோடும், இயற்கையோடும் ஒற்றுமை உணர்வைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகும் என்று அவர் வலியுறுத்தினார். இதை பல நாடுகளும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க ஐ நா சபை அங்கீகாரம் வழங்கியது.

சர்வதேச யோகா தினத்தின் நோக்கம் :

  • சர்வதேச யோகா தினம் யோகா பயிற்சியின் பல நன்மைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் ஆரோக்கியமான தேர்வுகள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை தீர்மானமாக ஒப்புக்கொள்கிறது.
  • இதற்கு இணங்க, உலக சுகாதார அமைப்பு, உறுப்பு நாடுகள் தங்கள் குடிமக்களை உடல் செயலற்ற தன்மையைக் குறைக்க ஊக்குவிக்க வேண்டும், இது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும் மற்றும் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாகும். 


TNPSC GROUP 2 NOTIFICATION

 


Tuesday, June 18, 2024

ABRSM தேசிய செயற்குழு கூட்டம்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வலியுறுத்திய கோரிக்கைகள்

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழு கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது.

 இக்கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநிலத்தலைவர் திரு திரிலோகசந்திரன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் மு‌‌.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கடந்த கால செயல்பாடுகள் வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர்.

           மேற்படி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி அவர்கள்  ஆசிரியர்  மற்றும் மாணவர் நலம் சார்ந்த கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்                  .                                 

  1)   நாடு முழுவதும்தேசிய /பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு  கடைசி ஊதியத்தில் 50% கிடைக்கும் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.      .     

       .                                 

  2)  ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என உள்ளவாறு அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் முறையான  நியமனமாக கால முறை ஊதியத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும்(தரமான சமமான கல்வித்தரம் உறுதி செய்திட).   

     

 3) ஆசிரியர்கள் ஆண்டுதோறும்  வருமான வரியாக பெரும் தொகை செலுத்தி வருவது மிக அதிருப்தி அளிக்கிறது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது தனி வருமான வரி விகித அட்டவணை வழங்கப்பட வேண்டும்                   

 

4)அனைத்து நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் NCC அமைப்பு செயல்பட வேண்டும்             

  5)  NMMS   தேர்வில்   வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும்   பரிசுத்தொகையும்  இரு மடங்காக       அதிகரிக்கப்பட வேண்டும்             

 

      6) 1-8.  வகுப்பு    போதிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறுவதற்கு   ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் விவாதப்  பொருளாகி உள்ள NCTE   NOTIFICATION    RTE    சட்டம் நிறைவேற்றப்பட்ட 23-8-2010  க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்ற அறிவிப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


   7)  23-8-2010 இல் RTE  சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு  TET தேர்வு கட்டாயம் என 16-11- 2012   இல் தான் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைப்பட்ட  காலத்தில் பணி நியமனம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மைபள்ளி ஆசிரியர்களுக்கும்  தவிர்ப்பாணை வழங்கப்பட்டது போலும்  கேரளா கர்நாடகா மகாராஷ்ட்ரா உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2013 வரை நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை படுத்தியது போல தமிழ்நாட்டில் பணிபுரியும் சிறுபான்மையற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்தி 1500ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் பெறவும் NCTE வலியுறுத்தி தவிர்ப்பாணை பெற வேண்டும்.                   


8) தமிழ்நாட்டின் பிற மாநில எல்லைப்புற மாநிலங்களில் பயிலும்  மாணவர்கள்   கல்வி வேலை வாய்ப்புகளில்      பயன்பெறும் வகையில்  மும்மொழிக்கொள்கை (அவர்கள் விரும்பும் தாய்மொழி) ஏற்கப்பட வேண்டும்       .                                                                        

 9) நமது சங்க அமைப்பை  CLUSTER அளவில் கொண்டு செல்வது தலையாய பணியாக இருக்க வேண்டும்                       

10) NEP 2020 அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்.                   

 11) ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொண்டு சமூக பிரச்சனைகளை தீர்க்கப்பாடுபடுவதன் மூலம் மாணவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்த முடியும்  என்ற வகையில் பணியாற்ற வேண்டும் . ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண மத்திய அரசை தேசிய அமைப்பும் அந்தந்த மாநில அரசுகளை மாநில அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு தேசிய துணைத்தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.

    அமைப்புச்செயலாளர் மகேந்திர கபூர் , இணை அமைப்பு செயலாளர் லட்சுமண்  பொதுச்செயலாளர் சிவானந்த சிந்தன்கரே வழிநடத்தினர்.