🔥🔥🔥🔥🔥*சிங்கப்பெண்கள் எங்கள் தங்க பெண்கள் கோவை மாவட்ட சாதனைப் பெண்கள்*
🔥🔥🔥🔥🔥
தேசிய ஆசிரியர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சார்பாக இன்று மாலை 18/6/2026 - TET தொடர்பான தகுதி தேர்வை விலக்க கோரி தேசிய ஆசிரியர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சருக்கும் பிரதம மந்திரிக்கும் கோரிக்கை மனு கடிதத்தை வழங்கினார்கள்.
🔥🔥🔥🔥🔥
அது சமயம் கோவை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க பொருளாளர் திருமதி எஸ் இந்திராணி , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி மணிமேகலை, திருமதி மாலா அன்னூர் ஒன்றியம், திருமதி ராணி கோவை நகர்ப்புற பொறுப்பாளர், திருமதி தனா ஆசிரியைகள் நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் TET தகுதி தேர்வு விலக்கு வேண்டும் என்றும்
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த மூன்று வருடங்களாக பொது மாறுதல் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை சிலவற்றையும் எடுத்துரைத்து வந்தனர் .
🔥🔥🔥🔥🔥
மேலும் இதில் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கூர்ந்து கவனித்து அதை தனி கவனத்தில் குறித்துக் கொண்டார் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட *ஐந்து சிங்க பெண்களுக்கு* எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
💐💐💐💐💐
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நானும் திரு தினேஷ்ம் வர இயலாத பொழுதில் கூட நிலைமையை குறித்த நேரத்தில் சரியாக செய்து சாதித்து வந்த ஐந்து ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்கி கொள்கிறேன்.
தங்கம் செய்யாததை நமது சங்கம் செய்யும் அப்படி சங்கத்தில் உள்ள சிங்கப்பெண்களுக்கு மிகப்பெரிய சல்யூட்.🫡🫡🫡🫡🫡
நன்றி .
திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் தலைவர்
தேசிய ஆசிரியர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம்



No comments:
Post a Comment