Pages

Pages

Thursday, June 18, 2026

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 18.6.2026 (வியாழன்)மாலை 5 மணி அளவில் தேசிய ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பின் வழிகாட்டலின் படி மூத்த ஆசிரியருக்கான TET தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வருகின்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஏற்றக்கோரி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் ,

மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் அவர்களுக்கும், டெட் தேர்விலிருந்து மூத்த ஆசிரியர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தீர்மான ஏற்ற கோரியும் கோரிக்கை கடிதங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக மாண்புமிகு,பாரத பிரதமர்,மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்ப சமர்ப்பிக்கப்பட்டது .நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் 

திரு சா. பரமசிவம் செயலாளர் திரு .கணேசன் பொருளாளர் 

திரு.ஆறுமுக கடவுள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் பிற ஆசிரியர் சங்கமான ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி,வாடிப்பட்டி ஒன்றியம், பட்டதாரி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,

நிர்வாகிகள் மதுரை மாநகராட்சி ஆசிரியர் நல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் .முன்னதாக கடிதம் வழங்க நிகழ்வுக்கு முன் டெட் விலக்க மசோதாக்கான விளக்கக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு சா. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்கள், பிற ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.










No comments:

Post a Comment