Pages

Pages

Thursday, June 18, 2026

தர்மபுரி மாவட்டம்

 ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!!!

பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களை பாதுகாத்திட -TET தேர்வில் இருந்து விலக்கு கோரி இன்று நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் வழியாக அகில பாரத ராஷ்டிரிய சைஸிக் மகா சங்கத்தின் ஆசிரியர்கள் (ABRSM ) பாரத பிரதமருக்கும், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


       இன்று 18.06.2026 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி அமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழியாக தமிழ்நாடு முதல்வர், பாரத பிரதமர் மற்றும் பாரத கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு மனு வழங்க தருமபுரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள்......


 கோரிக்கைகள் 


 1.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009- (23/08/2010 ) மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றம் 29/05/26 தாளிட்டு தீர்ப்பாணை -

16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்தல் மற்றும் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வரிடம் கோருதல்.


 2.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 16/11/2012 ஆண்டுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பாராளுமன்றத்தின் நடப்பு ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடரில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவரக் கோரி பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் D..முருகன், மாவட்ட செயலாளர் நா. குமார் ,அரூர் கல்வி மாவட்ட தலைவர் இராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி ஜெயலட்சுமி மற்றும் இணை செயலாளர் முருகன், பென்னாகரம் வட்டார செயலாளர் கார்த்திக் ,சேவை பிரிவு தலைவர் ராம்குமார் ,மகளிர் அணி செயலாளர் திருமதி.பரிமளா தேவி ஆசிரியை மற்றும் பல ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் CPS- இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரசேகர் ஐயா வாழ்த்துரை வழங்கினார்.





No comments:

Post a Comment