பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருதல் , தமிழ்நாடு நிதி உதவி பள்ளிகளில் 16-11-2012 க்கு முன் வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்களிக்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை !!!
இன்று 03/08/2023 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் புதுடில்லியில் கல்வித்துறை சார்ந்த (தமிழகம் மற்றும் இந்தியா முழுவதற்குமான) கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை எடுத்துரைத்து மத்திய/மாநில அரசுகளை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டுமென.தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை, பாராளுமன்ற வளாகத்தில், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் மாநில தலைவர் திரிலோகசந்திரன், மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, மாநில துணைத் தலைவர் முருகன், மாநில இணைச் செயலாளர் இராகவன் மற்றும் மாநில மகளிர் பிரிவு இணைச் செயலாளர் பூங்குழலி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திரு. G.K வாசன், திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், திரு.Dr.செல்லக்குமார், திரு.அப்துல்லா திரு.தம்பிதுரை, திருமதி.கனிமொழி சோமு ஆகியோரையும் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் திரு L. முருகன் ஆகியோரையும் சந்தித்தனர். ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடுமுழுவதும் மீண்டும் கொண்டு வர வேண்டியும், நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் 30,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் தமிழ்வழி நவோதயா பள்ளிகள் தொடங்கவேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.தமிழகத்தில் 2009 க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்சனைகள்,இன்றைய சூழலில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் அவசியம் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிதி அமைச்சர் அவர்களிடம் தனிநபருக்கான வருமானவரி விலக்கு ரூபாய் 7 லட்சம் (எந்த கழிவும் இல்லாமல்) ஆக உயர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேசிய கல்விப்பணியில்
மு.கந்தசாமி
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment