Pages

Sunday, July 30, 2023

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குரு வணக்கம் நிகழ்ச்சி -2023
     

  29/07/2023

 மாலை 4.00 மணிக்கு குரோம்பேட்டை ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக 

குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் 18 பேர், மாணவர்கள் 15 பேர் உட்பட மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சரஸ்வதி வந்தனம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.


      நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் வரவேற்று,தொகுத்து அளித்தார்கள்.சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னடை அணிவித்து,நூல்கள்  பரிசளிக்கப்பட்டன.


         மாவட்ட தலைவர் திரு சி.பா.நாராயணன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தி குரு வணக்கம் நிகழ்ச்சி நடத்துவதன் அவசியம் மற்றும் சூழல் பற்றி விளக்கினார். மாநில இணைச்செயலாளர் திரு.வினோத்குமார் அவர்கள் சங்க அறிமுகம் செய்தார்கள்.


            நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த குன்றத்தூர் முருகன் கோயில் தலைவர் *திரு. நரசிம்மன்* அவர்கள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களை எடுத்துரைத்தார்கள். 

ஸ்ரீ விஷ்ணு ஜோதிட வித்யாலயம் நிறுவனர் திரு.சக்ரபாணி அவர்கள் நம் சங்கத்தின் நோக்கங்கள் சிறப்பாக இருப்பதாக சிலாகித்து பேசினார்கள். பொதுநல ஆர்வலர் திரு.சஞ்சய் அவர்கள் குரு மந்திரம் சொல்லி அதன் பொருள் விளக்கம் தந்தார்கள். தலைமை ஆசிரியர் திரு.அர்ஜுணன் அவர்கள் உண்மையான வரலாறுகளை நமது பாடத்திட்டம் போதிக்கவில்லை என பேசினார்கள்.


             பின்னர் சரஸ்வதி படம், வியாசமகரிஷி படத்திற்கு அனைவரும் வரிசையில் நின்று பூச்சொரிந்து பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து விவேகானந்தாபள்ளியின் முன்னாள் தாளாளர்  திரு.சீதாராமன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.உரையில் பண்டைய பாரததேசம் எப்படி எல்லாம் விஞ்ஞானத்தில் சிறந்தோங்கி இருந்தது & மாதா,பிதா,குருவை மதித்துநடக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார். 


      பிறகு திரு.வினோத்குமார் அவர்கள் தேசபக்தி பாடல் பாட, அதைப்பின்பற்றி அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.அடுத்து மாவட்டத் துணைத் தலைவர்

 திரு.ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்

        நிகழ்ச்சி நாட்டுநல வாழ்த்து&தேசிய கீத்த்துடன்  இனிதே நிறைவடைந்தது.



🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment