Pages

Sunday, July 30, 2023

விருதுநகர் மாவட்ட செய்திகள்

 குரு வணக்கம் நிகழ்ச்சி 



 விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குரு வந்தனம் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சுமி வளாகத்தில் 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு விஜய் அவர்கள் கலந்து கொண்டு சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும். கொரோனா காலத்தில் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் செய்த சேவைப் பணிகளையும் விவரித்தார். மேலும் தவறான பாதையில் செல்லும் மாணவ சமுதாயத்தினை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் சேவை பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார். வரவேற்புரை வழங்கிய கிரீடா பாரதி அமைப்பின் தமிழக அமைப்பாளர் திரு பெரியசாமி அவர்கள் சமுதாயப் பணிகளில் ஆசிரியர்களின் பங்கினை கூறி அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களை தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைய அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு முனியாண்டி அவர்கள் தற்போதைய கற்றல் கற்பித்தல் பணியில் ஆசிரியர்களுக்கு உள்ள சவால்கள் பற்றியும் ஆசிரியர்களின் ஒற்றுமையின் அவசியம் குறித்தும் விவரித்தார். கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக நடைபெற்ற சேவை பணிகளான ரத்ததான முகாம் இலவச நீட் இணைய வழி பயிற்சி , ஏழை எளிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்குதல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி குணவதி வாழ்த்துரை வழங்கினார் மாவட்ட தலைவர் திரு சரவண செல்வன் நன்றியுரை வழங்கினார் நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் திரு இன்னாசி ராஜா அவர்கள் தொகுத்து வழங்கினார். குரு வந்தனம் நிகழ்ச்சி நாட்டு நல பாடல் மற்றும் நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.






No comments:

Post a Comment