ஈரோடு மாவட்ட பொருளாளர் சண்முக ராஜுலு தலைமையில் நடந்தது சிக்கஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜடேஸ்வாமி முன்னிலை வகித்தார்.துவக்க விழாவில் 40 ஆசிரியர்கள் தங்களை தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைத்துக்கொண்டனர் மாநில பொருளாளர் திருஞான குகன், மாவட்ட ஊடகச் செயலாளர் நவநீதன், ஈரோடு கல்வி மாவட்டம் (தொடக்கக் கல்வி) பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் தாளவாடி பகுதிகளில் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆசிரியர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் கருத்துக்களை எடுத்துரைத்து மும் மொழிக் கொள்கை வந்தால் மட்டுமே தீர்வு என கோரினர் பொதுச்செயலாளர் கந்தசாமி கோரிக்கைகளை நிறைவேற்ற செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார் .
வரும் 27 ந்தேதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர் நிறைவாக தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தாளவாடி ஓன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment