Pages

Wednesday, January 19, 2022

தென்காசி மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்டக் கிளையின் துவக்க விழா ஸ்ரீ பிலவ - தைத்திங்கள்  5ம் தேதி (18.01.2022 ) இனிதே நடந்தேறியது. சங்கரன்கோவில் வணிக வைசிய உயர்நிலைப் பள்ளயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செலல்குளம் ஊ.ஒ.து. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. K. காமாட்சி அவர்கள் தலைமை தாங்கினார். வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. மகாலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கொள்கைகள் நோக்கங்கள் பற்றி மாநில இணைச்செயலாளர் முனைவர் இரா. இரமேஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்டத்தலைவராக திரு. K. காமாட்சி அவர்களும் மாவட்டச் செயலாளராக திரு. மகாலிங்கம் அவர்களும் பொருளாளராக திரு. முத்துப்பாண்டி அவர்களும் துணைத்தலைவர்களாக திரு சங்கர், திரு. ராமமூர்த்தி, திரு. ராஜேஷ் ஆகியோரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக திரு குமரேசன், திரு. சரவணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து புதிய உறுப்பினர் கொள் சேர்க்கை நடைபெற்றது. அனைவருக்கும் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் நாட்காட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் திரு. பா. சிவசுப்பிரமணியன் செய்திருந்தார்.






















No comments:

Post a Comment