Pages

Pages

Friday, June 12, 2026

சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு!!!













TET தேர்வுக்கு விலக்களித்து மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!!

ABRSM புது டெல்லி உடன் இணைந்த தேசிய ஆசிரியர் சங்கம்(தமிழ்நாடு) இன்று (12.06.2026) சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த சந்திப்பானது அகில பாரத அளவில் ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் நடைபெற்றது.


அந்த சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்கள்

1) ஆசிரியர் தகுதி தேர்வினை தமிழ்நாட்டில் 16.11.2012 ற்கு முன் ஆசிரியப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் விலக்கு அளிக்க வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசானது அவசர சட்டம் இயற்ற வேண்டும்.

அதேபோல் தமிழ்நாடு அரசானது மத்திய அரசுக்கு சட்டமன்ற தீர்மானம் மூலம் இதனை பரிந்துரை செய்ய வேண்டும். 

மேலும் வருகிற 18/6 /2026 அன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்களிடம் பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் மாநில முதலமைச்சர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் அவர்களுக்கு பணியில் மூத்த ஆசிரியர்களுக்கு (16.11.2012 ற்கு முன்பு பணியில் சேர்ந்த) ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை கடிதம் வழங்கப்பட உள்ளது.இவர்கள் பணியில் தொடர,
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு அவசியமில்லை என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏனெனில்
2021 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

தற்சமயம் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலை இருப்பதினால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.


மேலும் பணி நியமனத்திற்குத்தான் இனச்சுழற்சி அடிப்படை தேவை. எனவே 

அடுத்த மாதம் நடைபெறக்கூடிய பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள தகுதித் தேர்வில் இன சுழற்சியான அடிப்படை மதிப்பெண்கள் தேவையில்லை.

பீகார், போன்ற மாநிலங்களை உதாரணத்தில் கொண்டு பொதுப் பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் 60 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக எடுத்துக்கொண்டு தேர்வு வைத்தால் அனைத்து பிரிவு ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வினை தேர்ச்சி பெறுவதற்கு எளிதாக இருக்கும். என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது 


இந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு M.K.திரிலோக சந்திரன், மாநிலப்பொதுச் செயலாளர் திரு கந்தசாமி, ஊடகச் செயலாளர் யுகபதி மாநில இணை செயலாளர்கள் திரு நீலமேகன் மற்றும் திரு. இராமச்சந்திரகுமார் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் மற்றும் திரு.ஞானம் அவர்கள் கலந்து கொண்டனர்.



 

No comments:

Post a Comment