Pages

Pages

Thursday, May 28, 2026

TET ISSUE - Our Appeal!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் நேற்று (27-5-26) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம்.

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆய்வுக்கூட்டங்கள் இருந்ததால் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின் சந்தித்தோம்.

அரசுப்பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தகுதித் தேர்வுத்தேர்வு தேர்ச்சி மதிப்பெண் சார்ந்து பேசினோம். பள்ளிக்கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வழங்கினோம். ஓய்வின்றி தொடர் நிகழ்ச்சிகள் இருந்தபோதும் கனிவுடன் கேட்ட அமைச்சர் தற்போது தான் பதவி ஏற்று 15 நாட்கள் தான் ஆன நிலையில் இவை குறித்து பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்களை சந்தித்து கூறுங்கள் அவர்கள் மூலம் கருத்துருக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து விளக்கினோம்.

ஏற்கனவே அரசுப்பணியில் முழுமையான கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் மூலம் நியமனம் பெற்று பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அனைவருக்கும் சமமான மதிப்பெண் நிர்ணயம் செய்வதே சரியாக இருக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் சொல்லொணா மன உளைச்சலில் ஆசிரியர்கள்/பெண் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை எடுத்துரைத்தோம் உங்கள் கோரிக்கை நியாயமானது என்பதை இயக்குநர் புரிந்து கொண்டார்.

பீகார் மாநிலத்தில் அனைத்து பெண் ஆசிரியர்களுக்கும் , PWD/SC/ST பிரிவினருக்கு 60 மதிப்பெண் OBC -67.5 மதிப்பெண் ,OC - 75 மதிப்பெண் என அரசாணை வெளியிட்டு அதன் பின்னர் தேர்வு நடத்தியதால் அங்கு பெரும்பான்மை ஆசிரியர்கள் தேர்வு தேர்ச்சி பெற்றதை சுட்டிக்காட்டினோம் இதே போல் நடைமுறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருவதையும் தற்போது மேற்கு வங்க அரசு வெளியிட்ட அரசாணையினையும் மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குனர் பார்வைக்கு கொண்டு சென்றோம் இது குறித்து அந்தந்த மாநில அரசு கல்வித்துறை செயலாளர் களுடன் விவாதித்து வழி வகைகளை கண்டறிய கேட்டுக் கொண்டோம்.


உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு விசாரணை விவாதத்தின் போது தேர்ச்சி பெற நான்கு ஆண்டுகள் அவகாசம் கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் பேசியதற்கு வருத்தத்தை பதிவு செய்தோம்.


மத்திய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திரா பிரதான் அவர்களுடனான சந்திப்பு விபரங்களையும் அவர்களிடம் தெரிவித்தோம் 


அனைத்து விசயங்களையும் கனிவுடன் கேட்ட மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து தெரிவிப்பதாக தெரிவித்தார் 


நிச்சயமாக நல்ல முடிவுகள் ஏற்படும் என நம்புகிறோம் 


இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் பொதுச் செயலாளர் கந்தசாமி துணைத் தலைவர்கள் முருகன் விஜய் மற்றும் இணைச் செயலாளர் ராகவன்,நீலமேகம் தலைமை நிலைய செயலாளர் ராமச்சந்திர குமார் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மு.கந்தசாமி,

பொதுச் செயலாளர் 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

7373803777




No comments:

Post a Comment