Pages

Pages

Saturday, May 16, 2026

ABRSM தேசிய செயற்குழு கூட்டம் - கர்நாடகா!!!

ABRSM தேசிய செயற்குழுவில்

கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு

தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள ABRSM(அகில பாரதீய ராஷ்டிரிய சைக்சிக் மகா சங்கம்) அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மே 16,17 தேதிகளில் நடைபெற்று வருகிறது அதில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி,மகளிர் அணி செயலாளர் சாருமதி தேவி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது 

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் (TET EXAM) என்பதிலிருந்து அந்தந்த மாநிலங்களில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு முன்பு வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கான,சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில் நிலுவையின்றி விடுவிக்கப்பட வேண்டும் 

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ஊழியர்களில் 95% பேர் விரும்பவில்லை என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். 

கல்வித்தகுதிகளுக்கு நாடு முழுவதும் தேர்ச்சி மதிப்பெண் ஒரே மாதிரியான அளவில் நிர்ணயம் செய்து ஒரு மாநிலத்தில் தேர்ச்சி பெற்றோர் எந்த மாநிலத்திலும் வேலை வாய்ப்பு பெற தகுதி பெற்றவர்களாக கருதப்பட வேண்டும். 

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது இரண்டு ஆண்டு ஊதிய உயர்வு கொண்டதாக இருக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். 

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்தி 1-1-2026 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும். அதில் குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் ₹50000, வீட்டு வாடகைப்படி அடிப்படை ஊதியத்தின் சதவீத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 25,000/- நிர்ணயிக்கப்பட வேண்டும்.

NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில், SC/ST கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் NMMS உதவித்தொகை பெற மத்திய கல்வி அமைச்சகம் அனுமதிப்பது இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.





No comments:

Post a Comment