Pages

Pages

Sunday, March 15, 2026

PRESS RELEASE

 தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு!!!

பள்ளிக்கல்வி இயக்குனர் துவக்கி வைத்தார்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாட்டின்

சார்பாக 

TNTET 2026 தேர்வுக்கான பயிற்சி வகுப்பின் துவக்க விழா 15-3-26 ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது மாநிலத்தலைவர் திரு திரிலோகச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

மதிப்புமிகு

பள்ளிக் கல்வி இயக்குனர்

முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள்

காணொளி வாயிலாக துவக்கி வைத்து, 

வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த முயற்சிக்காக தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை இயக்குநர் அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். நிகழ்ச்சியினை பொதுச் செயலாளர் கந்தசாமி ஒருங்கிணைத்தார் கோட்ட செயலாளர் அருள் செல்வன் நன்றி கூறினார் .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வரும் நான்கு மாதங்களுக்கு தினசரி இந்த பயிற்சி வகுப்பு 

Zoom காணொளி வழியாக நடைபெற உள்ளது. 3000 பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.







No comments:

Post a Comment