Pages

Pages

Tuesday, February 3, 2026

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 3.2.2026 (செவ்வாய் ) தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக ஜெய்ஹிந்த் புரத்தில் அமைந்துள்ள குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் கடமை உணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.சரியாக மாலை 4:30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து சரஸ்வதி வந்தனத்துடன் கூட்டம் துவங்கியது.பள்ளியின் தாளாளர். மதிப்பிற்குரிய திரு.லட்சுமி காந்தன் மாநில துணை தலைவர் திரு.விஜய் மாவட்ட தலைவர் திரு .பரமசிவம் மாவட்ட செயலாளர் திரு .கணேசன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பள்ளியில் தாளாளர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் மாணவர்களை மாவட்ட தலைவர் திரு .பரமசிவம் வரவேற்றார்.பள்ளியின் சார்பாக மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் மாவட்ட துணை தலைவர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.பின்பு வாழ்த்துரை வழங்கிய பள்ளியின் தாளாளர் கடமை உணர்வ தினத்தில் முக்கியத்துவத்தையும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் பணிகளையும் பாராட்டி மாணவர்களுக்கு கடமை உணர்வு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.சிறப்புரையாற்றிய 🎤🎤🎤🎤🎤🎤🎤மாவட்ட தலைவர் திரு பரமசிவம் மாணவர் ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் சமூக பொது மனிதனின் கடமைகளை மாணவர்களுக்கு எளிமையாக எடுத்து கூறினார்.தலைமை உரையாற்றிய 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤மாநில துணை தலைவர் திரு விஜய் அவர்கள் மாணவர்களுக்கு ஐந்து முக்கிய கடமைகளை நினைவூட்டி அதை எவ்வாறு கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய இலக்கை அடையலாம் என்பதை எளிமையாக எடுத்துக் கூறினார்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளிக்கு தேசிய சங்கம் சார்பாக நினைவு பரிசும்📕📒📗📕📗📕📗📕📗 புத்தகங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட பொருளாளர் திரு ஆறுமுக கடவுள் அவர்கள் நன்றியுடைய ஆற்றினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர் திரு கணேசன் மிகச் சிறப்பான 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯முறையில் செய்து நிகழ்ச்சியை திறம்பட நடத்திக் கொடுத்தார்.நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மாணவிகள் மற்றும் 20 ஆசிரியை பெருமக்கள் பங்கேற்றனர்.















No comments:

Post a Comment