மதுரை 09.01.2026
இன்று மாலை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் சென்ற போது SSTA (சம வேலைக்கு சம ஊதியத்திற்காக போராடிக் கொண்டிருக்கக்கூடிய இடைநிலை ஆசிரியர் சங்கம்) அமைப்புச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தது அவர்கள் மத்தியில் இந்த தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் ஏமாற்றத்தில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் அவர்களது போராட்டமானது வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராட்ட களத்தில் இருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அவர்களது சம வேலைக்கு சம ஊதியம் என்பது தேசிய ஆசிரியர் சங்கத்தின் ஒரு முக்கியமான கோரிக்கை என்பது அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போராட்ட களத்தை விட்டு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் வெளியேற வேண்டாம் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்ற உற்சாகமான உரை அவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து போராட்ட களத்தில் உறுதியாக இருப்போம் என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டார்கள்.அவர்களது கோரிக்கை நமது அமைப்பின் கோரிக்கையாக இருப்பதற்கும் அவர்களது போராட்டத்திற்கு தேசிய ஆசிரியர் சங்கம் உடன் நிற்கும் என்ற செய்திக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள். மேலும் புதிய பென்ஷன் திட்டம் TAPS என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது அவர்கள் மத்தியில் நமது அமைப்பின் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது திட்டம் ஆசிரியர்களுக்கு பாதகமானது என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது அதனை உற்று கவனித்த ஆசிரியர்கள் நமது நிலைப்பாடு அவர்களது நிலைப்பாடு என்பதையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
செய்தி வெளியீடு
தேசிய ஆசிரியர் சங்கம்
மதுரை மாவட்டம்









No comments:
Post a Comment