Pages

Pages

Tuesday, January 27, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் சங்க அமைப்பின் கடமை உணர்வு தின விழா 26.01.2026!!!

 திண்டுக்கல் மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பழனி நேஷனல் ஹிந்தி வித்யாலயாவில் கடமை உணர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

 நாள் : 26.01.2026

மாலை 5.00 -8.00.

  நிகழ்ச்சியில் முக்கியக் கருத்தாளராக சிறப்பு அழைப்பாளர் திரு. இராதாகிருஷ்ணன் ஜீ.,இதிகாச சங்கலன சமிதி. மாநில செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசத் தலைவர்கள்,இராமாயன கருத்துகள், பஞ்சபரிவர்த்தன் குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார். 15 ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்,45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவிகள் கணேஷினி, கைலாஷினி கடவுள் வாழ்த்து பாடினர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் பழனி கல்வி மாவட்ட பணிநிறைவு அணித் தலைவர் திருமதி. ஜான்சிராணி அம்மா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் விஜய் வாழ்த்துரை வழங்க மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். திருமதி. மல்லிகா அவர்கள் வரவேற்புரை வழங்க திரு.ரமேஷ்கண்ணன் நூலகர் நன்றியுரை வழங்கினார். மாணவச் செல்வங்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பாரதமாதா மற்றும் தேசத் தலைவர்கள் வேடமிட்டிருந்த குழந்தைகளை வாழ்த்தி சங்க ஆசிரியப் பெருமக்கள் வரவேற்று அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தி சிறப்பு செய்தனர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பணி நிறைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் "வந்தே மாதரம்" புத்தகம் வழங்கி பாடலின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. சில மாணவர்களது மனதில் தான் எதிர்காலத்தில் ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். நிகழ்ச்சி நல்ல ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதாக அமைந்தது.




















No comments:

Post a Comment