TNTET STUDY MATERIALS - CLICK HERE
தேசிய ஆசிரியர் சங்கம் அமைப்பின் ஆசிரியர் தகுதி தேர்வு வழிகாட்டி நிகழ்வு
கடந்த இரண்டு மாதங்களாக நிகழ்ந்து வந்தது.
முதல் மாதம்
கையேடுகள் பாடப் புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த 30 நாட்கள் தொடர்ச்சியாக வகுப்புகள் நிகழ்ந்தன.
முதல் 10 நாட்கள் தினசரி 2 வகுப்புகளாகவும்
அடுத்த 10 நாட்கள் தினசரி 2 அல்லது 3 வகுப்புகளாகவும்
கடைசி 10 நாட்கள் 3 மற்றும் 4 வகுப்புகளாகவும் நடைபெற்றன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வரை வகுப்புகள் நடந்தன
🎙️திரு பா.சத்யநாராயணன் ஆசிரியர் பயிற்றுனர் நாகை - கல்வி உளவியல்
🎙️திரு மா.பிரபு முதுகலை.ப.ஆ. குருக்கத்தி சமூக அறிவியல்
🎙️திரு லெ.சேகர். ப.ஆ. வேதாரண்யம் - கணிதம்
🎙️திருமதி.
சே.கலைவாணி ப.ஆ. குருக்கத்தி- அறிவியல்
🎙️திரு. செ.அருள்செல்வம் ப.ஆ. கீழ்வேளூர் - தமிழ் மற்றும் ஆங்கிலம்
பாடப்பகுதிகளில் வழிகாட்டினர்.
TET தேர்வர்கள் ZOOM வழியாக 470 நபர்கள் வரை அவரவர் தொடர்புடைய பாடங்களில் பங்கேற்றனர்.
முக்கிய கருத்துக்கள் தேர்வை எதிர் கொள்ள வேண்டிய முறைகள் தேர்வு நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் வழங்கப்பட்டன.
இறைவணக்கம் மாநில பொறுப்பாளர்களின் குறிப்புகளுடன் தொடங்கிய பயிற்சிகள் இடைவிடாது தொடர்ந்து நிகழ்ந்து
நிறைவாக 11.11.2025ல்
மாநில மாவட்ட பொறுப்பாளர்களின் வாழ்த்துச் செய்திகளோடு
நாட்டுநலவாழ்த்துடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment