Pages

Pages

Saturday, August 9, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று (9.5.25) சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம்,பசுமைத் தமிழகம், மற்றும் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா சார்பில் குருவணக்கம் உடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற்றதுஸ்ரீ கணேஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. . இந்த விழாவில் நமது மாநில துணைத் தலைவர் திரு.முருகன் ,மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விவேகானந்தா பளௌளி முதல்வர் திருமதி. இராணி குத்துலிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கினார்.பள்ளித் தாளாளர் திரு.இரவிமற்றும் தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் திரு. விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக வித்யா பாரதியின் மாநில செயலானர் திரு.நல்லசிவம் அவர்கள் தேசிய ஆசிரியர் சங்க தேனி மாவட்டத் தலைவர் திரு.பரமசிவம், தியாகி சுப்ரமணிய சிவா 100 வது நினைவு ஆண்டு விழாக்குழு வழக்கறிஞர் திரு.முத்துக்குமார், திரு.சிவமணிகண்டன், திருவிளையாடற்புராண ஆராய்ச்சி மையநிர்வாகி திரு.ரமேஷ்கண்ணன் (நூலகர்).திரு அசுராஜிஅழகுவேல் தர்ம ரக்ஷன சமிதி,திரு.வைரவேல், சிவாஜி மன்றம்,திருமதி. பாக்கியலக்ஷ்மி முதல்வர் ஸ்ரீ ராம் மெட்ரிகுலேஷன் பள்ளி,திரு.நாகராஜன் ABGPதிரு.அர்ச்சுனபாண்டியன் ,காசிமாயன், திரு.ஞானசேகரன்மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.தேசிய ஆசிரியர் சங்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததிரு.இளன்பரிதி மாவட்டத் தலைவர் வரவேற்புரை திரு.ஆறுமுகம் மாவட்ட செயலாளர் நன்றியுரை வழங்கினர். திரு.அழகேஷ்குமார் ஊடகப் பிரிவு செயலாளர், திரு.இயலரசன் மாவட்ட இணைச் செயலாளர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் 100 நபர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.









No comments:

Post a Comment