இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் சார்பில்- மகளிர் தின விழா -சிக்மா தனித் தேர்வர் பள்ளியில்-சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பாக பணியாற்றிய வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மகளிருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திருமதி கலைச்செல்வி அம்மையார் அவர்களும் ,தர்மபுரி மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் திருமதி கௌரி MD அவர்களும் ,தர்மபுரி மாவட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி கோமதி அம்மையார் அவர்களும் ,தர்மபுரி சிக்மா பயிற்சி பள்ளியின் தாளாளர் கல்பனா அம்மையார் அவர்களும் மேலும் தேசிய ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் முருகன் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் தேசிய ஆசிரியர் சங்க ர் தர்மபுரி மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் சத்திய நாராயணன் ,மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயலட்சுமி மற்றும் ஊடக பொறுப்பாளர் முருகன் , துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கடத்தூர், பெண்ணாகரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் (அருள் கந்தன், ராமலிங்கம் ,ரீனா ஆகியோர்) கலந்து கொண்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு விழாவிற்ககு சிறப்பு செய்தனர்.






















No comments:
Post a Comment