Pages

Thursday, December 5, 2024

CPS - contribution pension scheme

 ஓய்வூதியமில்லாத தமிழக CPS திட்டம்


அரசுப் பணியாளர்களே ஆசிரியர்களே இளைஞர்களே உழைக்கும் மக்களே அனைவருக்கும் வணக்கம்

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

 இளைஞர்கள் வேலை வாய்ப்பு எதிர்நோக்கி இருக்கின்ற நாட்டிலே வேலை கிடைப்பதும் கேள்விக்குறி வேலை கிடைத்தால் ஓய்வூதியம் என்பது கேள்விக்குறி இத்தனை கோடி பேருக்கு வேலை தருகிறோம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பென்ஷன் திட்டத்தை மாற்றுவோம் என வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்த உழைக்கும் மக்கள் நம்பிக்கையை பொய்யாக்கி வரும் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களே  2026 இல் ஒரு விரல் புரட்சி வரும்.


இன்றைய மத்திய பாஜக அரசு 1999 முதல் 2004 வரை ஆட்சியிலிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவு புதிய பென்ஷன் திட்டம் அந்த ஆட்சியில் பங்கெடுத்து ஆட்சியில் இருந்தது திமுக அந்த ஆட்சியாளர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை வெள்ளோட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு.  


அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 1.4 2003 அன்று முதல் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தியது. 


 மத்திய அரசு வகுத்து கொடுத்த புதிய பென்ஷன் திட்டத்தை அதிமுக அரசு மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பாகவே அதாவது மத்திய அரசாங்கம் 1.1.2004 முதல் தான் அமல்படுத்துகிறது என்ற நிலையில் தமிழ்நாட்டில் 9 மாதங்களுக்கு முன்பாகவே அமல்படுத்தியது.  


அவ்வாறு அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய அதிமுக அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பது அரசியலும் அதிகார வர்க்க அறிவுறுத்தலுமே காரணம். 


அன்றைக்கு அதிமுக அரசுக்கு  அரசு பணியாளர்கள் ஆசிரியர்களின் 18 லட்சம் வாக்குகளும் அவர் தம் குடும்ப வாக்குகளும் சேர்த்து 90 லட்சம் வாக்குகளும் உழைக்கும் மக்கள் வாக்குகள் என அனைவரும் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்கடித்து பாடம் புகட்டினோம். 


திராவிட முன்னேற்றக் கழகம் அதனால் பலனடைந்தது. ஒன்றிய அரசிலும் இடம் பெற்றது. அவ்வாறு ஆட்சிக்கு வந்த மத்திய ஒன்றிய அரசும் அதில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகமும் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவில்லை என்பது மறந்துவிட முடியாத வரலாறு.  


தமிழக அரசியலில் 2006 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் பொழுது இதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று உத்தரவாதம் தந்தது.  


இந்த நிலையில் அம்மையாரும் தாம் தவறு செய்து விட்டோம் என யோசித்து அதை சரி செய்வதற்கான முயற்சியாக 8 .2.2006 அன்று அரசு அலுவலர் ஒன்றியம் மூலமாக ஒரு மாநாட்டை கூட்டச் செய்து அதில் கலந்து கொண்டு பறிக்கப்பட்ட சலுகைகளை அளித்து விட்டோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அவரால் மீண்டும் கொண்டு வரப்படவில்லை. எனவே அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.

 

2006 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு பணியாளர்கள் அளித்த தபால் வாக்கிலே வெற்றி பெற்ற  18 எம்எல்ஏக்கள் எண்ணிக்கையால் தனிப்பெருங்கட்சியாகி கூட்டணி கட்சிகளோடு ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. 


அன்றைய தினம் அரசு பணியாளர்கள் தபால் வாக்குகள் இல்லையெனில் ஆட்சியின்  காட்சி மாறி இருக்கும். இது ஆவணப்பூர்வமான உண்மை.


ஆனால் அப்போதும் கூட 2011 வரை ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசு பணியாளர்களுக்கு சிலவற்றை கோரிக்கை நிறைவேற்றுகிறோம் என நிறைவேற்றி இருந்தாலும் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அதிலும் குறிப்பாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசவே இல்லை. அதற்கு விலையாக 1.5% வித்தியாசத்தில் திமுக தேர்தல் தோல்வி பெற்றார்கள் 2011-ல்.  


அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அம்மையார் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக ஜாக்டோ ஜியோ தலைவர்களில் பிரதானமாக முன்னெடுத்தவர்களை சந்தித்து விட்டு தான் பிரச்சாரத்துக்கு கிளம்ப வேண்டும் என தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த கட்சி மூலமாக வழிநடத்தப்படும் சங்கத்தின் தலைவர்களை கட்டாயப்படுத்தி சந்தித்து உத்தரவாதம் அளித்து பிரச்சாரத்துக்கு புறப்பட்டார்.


 பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை அவர் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன் என தெரிவிக்கவில்லை. 


அவ்வாறு பிரச்சாரத்தில் தேர்தல் வாக்குறுதி என்ற அடிப்படையில் நீங்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்கு உத்தரவாதம் தரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. 


அத்தகவல் அவருக்கு கிடைத்து வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கடைசி நாள் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்து பிரச்சாரத்தில் அறிவித்தார். 


அம்மையார் 2011 இல் ஒன்றரை சதவீத அரசு பணியாளர் வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தார்.


ஆனால் ஆட்சிக்கு வந்து 2015 ஆம் ஆண்டு வரை பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இடையிடையே போராட்டங்கள் நடந்தாலும் கூட எந்த அறிவிப்பும் செய்யாமல் இருந்தார்.  


இது வலியுறுத்தப்பட்டதன் விளைவாக திருமதி சாந்த ஷீலா நாயர் இ ஆ ப அவர்கள் தலைமையில் ஓய்வூதிய திட்ட மறுபரிசீலனை குழுவை அமைத்தார். ஆனால் அந்த குழு அறிக்கை வருவதற்கு முன்பாகவே அம்மையார் மறைந்தார். 


அந்த ஆட்சியை தொடர்ந்த அதிமுக முதல்வர் திரு ஓ பி எஸ் , திரு இ பி எஸ் இருவரும் அமல் படுத்தவில்லை.  


இந்நிலையில் 2021 இல் திராவிட முன்னேற்ற கழகம் புதிய தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்கிறது இந்த தலைமை போராட்டங்களில் கலந்துகொண்டு உத்தரவாதம் அளித்துள்ளது. சட்டமன்றத்தில் கோரிக்கையை பேசியுள்ளது என்ற அடிப்படையில் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் திமுக வை 2021 இல் அதே ஒன்றரை சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதாவது ஒரு லட்சத்து 99 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அரசு பணியாளர் ஆசிரியர்களுடைய ஓட்டும் அவர்கள் குடும்பத்தினர் ஓட்டும் தந்த வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்தார்கள். 


கடந்த ஆட்சியின் அவலங்களை போக்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வந்தவுடன் கடந்த அரசு   ஓராண்டு காலம்  நிறுத்தி வைத்திருந்த ஈட்டிய விடுப்பு ஒப்படை செய்து ஊதியம் பெறும் முறையை  மேலும் ஓர் ஆண்டு காலம் தடை செய்தார்கள். உழைக்கும் மக்களை அரசு பணியாளர்கள் ஆசிரியர்களை இதில் தான் முதலில் ஏமாற்ற துவங்கினார்கள். 

சரி அரசு வந்தவுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறது நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்ற அடிப்படையில் எடுத்த முடிவுக்கு  நாம் ஒத்துழைப்போம் என இருந்தோம்.  


ஆனால் நடந்தது வேறு.  அரசு ஓராண்டுக்கு நீட்டித்த சரண்டர் ஒப்படைப்பு தடையை மறு உத்தரவு வரும் வரை தடை என நீட்டித்தது. உழைக்கும் மக்களும் அரசு பணியாளர்கள் ஆசிரியர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். 


அதிர்ச்சி மீளவில்லை , அதற்குள் அடுத்த அதிர்ச்சியை அரசாங்கம் அரசு பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்தது அது என்னவெனில் மத்திய அரசாங்கம் அகவிலைப்படி உயர்வு அளித்தவுடன் தமிழக அரசு பணியாளர்களுக்கும் அறிவிக்கும் நடைமுறை கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது.


 தற்போதைய ஆட்சி அதிலும் மண்ணை அள்ளி போட்டு அகவிலைப்படி அறிவிக்கும் போதெல்லாம் உடனே அறிவிக்காமல் காலம் தாழ்த்தி அறிவித்து அதுவும் கூட மத்திய அரசாங்க அறிவிப்பை சுட்டிக்காட்டி அரசாணை வெளியிடும் நடைமுறையையும் கைவிட்டு ஏதோ இவர்களாக பார்த்து விலையேற்ற குறியீட்டை நிர்ணயிப்பவர்களாக நினைத்துக் கொண்டு அரசாணை வெளியிட்டார்கள். 


இப்படி அகவிலைப்படி உயர்வை தாழ்த்தி வழங்கி 21 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தராமல் நிறுத்தி வைத்துள்ளார்கள்.  


அதிமுக ஆட்சி ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் போது நிலுவைத் தொகை 21 மாத காலத்தை வழங்கவில்லை.  திமுக 21 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. இன்றைய அரசாங்கம் இப்படி சரண்டர் விடுப்பை பறித்துக் கொண்டது..அகவிலைப்படி நிலுவைத் தொகையை பறித்துக் கொண்டது. 21 மாத கால ஊதிய குழுவைத் நிலுவைதொகையை தரவில்லை. இப்படி பறித்துக் கொள்ளும் நடைமுறைகள் இந்த ஆட்சி அரசு பணியாளர்களுக்கு பரிசாக தந்து வருகிறது.


புதிய பென்ஷன் திட்டம் ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்த போது ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தில் இத்திட்டத்தை கொண்டு வரும் மாநிலம் இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. 


தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்ததால் ஒன்றிய அரசு 1.1. 2004 இல் கொண்டு வந்த  புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதற்கு முன்பே  கொண்டு வந்த ஓய்வூதியத் திட்ட மாநிலத்தை சேர்க்க இயலாது என்று ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையம் மறுத்துவிட்டது என்பதே உண்மை. அவ்வாறு மறுத்துவிட்ட ஒன்றிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க முடியாத ஒரு ஓய்வூதியத் திட்டம்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது.


  இந்த ஓய்வு திட்டத்தில் பங்களிப்பு செய்கிறோம் நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் பணியாளர்களிடமும் ஆசிரியர்களும் கிடைக்கின்ற பங்களிப்பு தொகை மட்டுமே கணக்கில் வைக்கப்பட்டு வந்தது மாநில கணக்காயர் இந்த கணக்கை கையாளுவதற்கு இந்த முறையில் பங்களிப்பு செய்வது என்றால் இயலாது என்று சொன்னது. இதன் விளைவாக அரசின் பங்களிப்பை செலுத்துவது என்ற நிலைக்கு இந்த அரசாங்கம் வந்தது. 


அதற்கு பிறகு தான் மாநில கணக்காயர் பங்களிப்பு ஓய்வூதிய  திட்டத்திற்கு கணக்குச் சீட்டு வழங்கும் முடிவுக்கு வந்தார்.


இதில் பங்களிப்பு செய்யப்பட்ட தொகை இன்றைய வரை பல லட்சம் கோடிகளை தாண்டி உள்ளது. அது முதலீடாக எங்கும் வைக்கப்படவில்லை

மத்திய அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்தி தேசிய ஓய்வூதியத் திட்டமாக தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. 


அந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு செய்து வரும் பணியாளர்களுக்கு ஒன்றிய அரசு 29% ஓய்வூதியமும் , பணிக்கொடையும் வழங்குகிறது. 


இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும்  பங்களிப்பு ஓய்வதிய திட்டம் என்பது உண்மையில் ஓய்வூதிய திட்டமே அல்ல. 


இந்தத் திட்டத்தில் பங்களிப்பு செய்து ஓய்வு பெறும் போது பங்களித்த தொகைக்கு அரசின் பங்களிப்பு சேர்த்து வட்டி இல்லாமல் ஒரு தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இது எப்படி ஓய்வூதிய திட்டமாக இருக்கும்.


ஓய்வூதிய திட்டம் என்றால் பங்களிப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை இருந்தால் தான் அது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்று எடுத்துக் கொள்ள முடியும். 


இங்கே பணியாளரும் அரசும்  பங்களித்து கொண்டு ஒரு தொகை அளிப்பது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்று ஏமாற்றுவதை இந்த அரசு கைவிட வேண்டும்


*தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக தலைமையிலான அரசு இந்த மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதிய திட்டமே அல்ல என இதை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவெடுப்பதை தவிர வேறு வாய்ப்பே இல்லை என்பதை உணர வேண்டும்.*


மேலும் தமிழ்நாட்டின் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் இந்த அரசின் மீது வைத்த நம்பிக்கையை பொய்யாக்காமல் சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று உறுதிமொழி அளித்து ஆட்சிக்கு வந்ததை மெய்யாக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 


இன்றைக்கு கூட கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல அதிமுகவினுடைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் அவர்களின் கள ஆய்வு கூட்டத்திலே பேசும்பொழுது நாம் அரசு பணியாளர் ஆசிரியர்கள் வாக்குகளை இழந்ததால் ஆட்சியில் இழந்தோம் என்பதை பகிரங்கமாக பொது மேடையிலே ஊடகங்கள் அறியும் வகையிலே அறிவித்துள்ளார்.


இன்றைக்கு உழைக்கும் மக்கள் சார்பிலே அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் சார்பில் இந்த அரசாங்கம் மேலும் நிதி இல்லை  என்று சொல்லிக்கொண்டே இருப்பதை விடுத்து 40 மாதங்களுக்கு மேலாக ஆட்சி நடத்தியும் நிதி நிலைமையை சீர் செய்யவில்லை என்ற அவப்பெயர் நீங்கும் வகையிலே பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதை அறிவிக்கும் நிலைப்பாட்டை 2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கின்ற முடிவை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மேற்கொள்வது தமிழ்நாடு அரசு பணியாளர்களும் ஆசிரியர்களும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது.  


இதை அறிவிக்க வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது.இதை  அறியும் வகையில் பின்வரும் களச் சூழலை எதார்த்த பார்வையில் பார்த்தோமேயானால் 


👉🏾பழைய ஓய்வூதய திட்டத்தை அமல்படுத்த வேண்டியதும், 

👉🏾நிரந்தர ஊதியமே பெற முடியாத அவுட்சோர்சிங் முறை ஒழிப்பு என்ற இரண்டும் எந்த அளவுக்கு அவசியமென்பதை உணர இயலும். 


இன்றைக்கு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது.


ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ 2025 ஆம் ஆண்டுக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். 


அப்படியானால் ஆட்சிக்கு வந்த போது மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்தது அந்த பணியிடங்கள் அப்படியே நிரப்பப்படாமலேயே மீண்டும் தேர்தல் சந்திக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி அமையக்கூடும் என்பதை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். 


இந்தியாவில் 2021 பிறகு காங்கிரஸ் ஆண்ட ஆளும் மாநிலங்கள் ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்கள் என 7 மாநிலங்கள் தேசிய புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தியுள்ளன. அதே வழியில் இங்கு அமலில் உள்ள  pension இல்லாத CPS  ஐ ரத்து செய்து தமிழ்நாடும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமாறு வேண்டி விtரும்பி கேட்டுகொள்கிறோம்


சமூக நீதி ஆட்சி என்பது சம நீதி கிடைக்க செய்யும் வகையில் நடத்துவதே!!!

No comments:

Post a Comment