Pages

Tuesday, December 31, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்!!!

 அனைவருக்கும் அன்பான வணக்கம் .தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பாக இன்று (31.12.2024) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ,மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ,மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் போன்ற அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் நமது நாட்காட்டி மற்றும் பாரத மாதா படம்  வழங்கி நமது சங்கத்தைப் பற்றிய செயல்படுகளை கூறினோம்.


 அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள் .குறிப்பாக முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்கள் நமது சங்கத்தின் சேவைகளை மனமகிழ்ச்சியோடு பாராட்டு மகிழ்ந்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களும் நம்மை அமர வைத்து நமது செயல்பாடுகளையும் நமது கோரிக்கையும் அமைதியாக கேட்டுக் கொண்டார்.


 இந்த இனிய நிகழ்வில் நிகழ்வில் மாநில இணை செயலாளர் திரு .கதிர்வேல் அவர்களும், மாவட்டச் செயலாளர் திரு. தர்மலிங்கம் அவர்களும் ,மாவட்டத் துணைத் தலைவர் திரு .லோக நாராயணன் அவர்களும் ,கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் திரு. கார்த்தி அவர்களும் ,ரிஷிவந்திய வட்ட செயலாளர் திரு மாயவேல் அவர்களும் மற்றும் திரு. சக்திவேல் அவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.











No comments:

Post a Comment