Pages

Saturday, November 30, 2024

மதுரை மாவட்ட செய்திகள் !!!

 இன்று 30.11.24 மதுரை சி பி எஸ் ஒழிப்பு அமைப்பின் கோரிக்கை விளக்க மாநாடு மதுரை ராஜாஜி பூங்கா அருகில் உள்ள முருகன் கோயிலில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் மாவட்ட செயலாளர் திரு. கணேசன், மேலூர் கல்வி மாவட்ட தலைவர் திரு. சேகர் மற்றும் மதுரை மாவட்ட உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி ஆசிரியர் நல சங்க உறுப்பினர்களுடன் இணைந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினுடைய கோரிக்கை விளக்க மாநாட்டில் பங்கேற்று நமது ஆதரவை தெரிவித்தோம். வாழ்த்துரையில் தேசிய சங்கம் மதுரை மாவட்ட தலைவர் திரு பரமசிவம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் நன்மைகளை விளக்கி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎஸ் ஒழிப்பிற்கான விழிப்புணர்வை நவீன முறையில் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.









No comments:

Post a Comment