Pages

Thursday, November 14, 2024

 

நாள்: 14.11.2024

தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு,வஞ்சிக்கும் தி.மு.க. அரசுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு கடும் கண்டனம்
 
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு நண்பன் என்பது மாயத்தோற்றமா?
 
 பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்துவது, ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து காசாக்கல், சம வேலைக்கு சம ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை அளித்தல், பகுதி நேர ஆசிரியர்களை பணி வரன்முறை செய்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உதவியுடன் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு  பதவி ஏற்றது முதல் இக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்துகொண்டே வஞ்சித்து வருவது சிறிதும் ஏற்புடையது அல்ல.
 
மருத்துவர்கள் மீதான தாக்குதலை தேசிய ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, இதைப்போன்றே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான சமூக விரோதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சகமாய் பிரித்தாளுவது, திசைதிருப்புவது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் எனவும், எதிர்காலம் குறித்து பேரச்சத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை முழுமையாகப் பேரிருளில் தள்ள வேண்டாம் எனக்கேட்டுக்கொள்வதுடன், இதுவரை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு கடும் கண்டனத்தினை தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு தெரிவித்துக்கொள்கிறது. மேலும் 2026 தேர்தலை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.  

               
           மாநிலத்தலைவர்
மாநில பொதுச்செயலாளர்
           

No comments:

Post a Comment